லட்சுமி விளக்கை இப்படி ஏற்றி வழிப்பட்டால் போதும்! வாழ்க்கையே தலைகீழாக மாறுமாம்!
வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுவதால் பல தீய சக்திகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். அதிலும், ஆடிமாதத்தில் பெண்கள் காலையிலேயே வீட்டை சுத்தம் செய்து மாலையில் லட்சுமி விளக்கிற்கு மாலை அணிவித்து பட்டுப்புடவை அணிந்து அலங்கரித்து பூஜை செய்வது வழக்கம்.
விளக்கேற்றும் வேளையில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக பெண்கள் தலைவாரி, தங்களை அழகு செய்து கொண்டு விளக்கேற்ற தொடங்க வேண்டும்.
மேலும், லட்சுமி விளக்கை அலங்கார படுத்தி விளக்கேற்றினால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும். பெரும் புண்ணியம் உண்டாகும். இவ்வாறு வீட்டில் வழிபட்டால் செல்வம் அதிகரிக்கும், திருமணத்தடை நீங்கும், பிள்ளைகளின் கல்வி அறிவு அதிகரிக்கும்.

நெய் தீபம் ஏற்றுவது உத்தமம். அனைத்து தெய்வங்களுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும். தடைபட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
அடுத்து, தாமரை தண்டு திரி, பஞ்சு திரி, வெண்மையான திரி கொண்டு விளக்கு ஏற்றலாம். வீட்டில் மண், பித்தளை, வெள்ளி விளக்கு முதலியவற்றில் ஏற்றலாம்.
கடலை எண்ணெய் தீபம் ஏற்ற கூடாது. கடலை எண்ணெய் கொண்டு ஏற்றினால் சாபம் மற்றும் தோஷம் ஏற்படக்கூடும் என்பதால் அதனை தவிர்த்து விடுங்கள்.
தடைபட்ட திருமணம் கை கூட துர்கை அம்மன் கோவில்களில் இரண்டு விளக்கில் சிவப்பு வஸ்திரம் திரியாக செய்து விளக்கு ஏற்றலாம்.
பொதுவாக திருமணத் தடை, குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேர புதிய வஸ்திரம் கொண்டு சிவப்பு திரி செய்து விளக்கு ஏற்றலாம்.
தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் பூவின் காம்பால் அணைக்க வேண்டும். எவர்சில்வர் விளக்கை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.