கிராமத்து ஸ்பெஷல் பனையோலைக் கொழுக்கட்டை- இனி வீட்டிலேயே செய்ங்க
திருக்கார்த்திகை நாளை முன்னிட்டு வீடுகளில் இனிப்பு பலகாரங்கள் செய்வது வழக்கம்.
அந்த வகையில், வழக்கத்திற்கு மாறாக கிராமத்து ஸ்பெஷல் பனையோலைக் கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு - 2 கப்
- வெல்லம் அல்லது கருப்பட்டி தூள் - 1 கப்
- தேங்காய் துருவல் - அரை கப்
- ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
- சுக்கு பொடி - அரை டீஸ்பூன்
- பனை இலைகள் - தேவைக்கு ஏற்ப

கொழுக்கட்டை எப்படி செய்யலாம்?
முதலில் அரை கப் தண்ணீருடன் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதனுடன் வெல்லம் அல்லது கருப்பட்டியை பொடியாக்கி போடவும். தண்ணீருடன் வெல்லம் சேர்ந்து கொதித்து சர்க்கரை பாகு தயாராகும். சர்க்கரை பாகுவை நன்றாக வடிக்கட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
அதன் பின்னர், அகலமான பவுலில் அரிசி மாவு, தேங்காய் துருவல், சுக்கு தூள் மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து விடவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மா பிசைவது போன்று பிசையவும்.

அடுத்து, பச்சை பனை ஓலைகளை சுத்தமாக கழுவி அதனுடன் கொழுக்கட்டைக்கு பிசைந்து வைத்திருக்கும் மாவை உள்ளே வைக்கவும். மாவு வெளியே வராமல் இருப்பதற்காக ஒரு பெரிய நூலினால் பனை இலைகளை கட்டி வைக்கவும்.
இறுதியாக ஒரு இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடங்கள் வரை நீராவியில் அவிக்கவும். அவித்து எடுத்தால் சுவையான பனையோலை கொழுக்கட்டை தயார்!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |