சமையலுக்கு பாமாயில் அதிகம் பயன்படுத்துறீங்களா? உயிரை பறிக்கும் நோய் வருமாம்
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பாமாயில் உடம்பிற்கு என்னென்ன கெடுதல்களை ஏற்படுத்துகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
பாமாயில்
இன்று பெரும்பாலான மக்கள் பாமாயிலை சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் உடம்பிற்கு ஆரோக்கியம் அளிக்கும் எண்ணெய்களில் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது தான்.
பாமாயில் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு என்று கூறிவந்த நிலையில், பாமாயில் அதிகம் பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏ்ற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான கடைகள் மற்றும் பிளாட்பார்ம்களில் விற்படும் உணவுகள், தின்பண்டங்கள் இவற்றில் பாமாயில் மட்டும் தான் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை பலமுறை பயன்படுத்துவதால் விஷமாக மாறி உடம்பிற்கு தீங்கு ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுவருகின்றது.
பாமாயிலை வதக்குதல், வறுத்தல் போன்ற சின்ன சின்ன உணவு விஷயங்களுக்கு பயன்படுத்தினால் கெடுதல் இல்லை என்றும் ஆனால் அதிக அளவு பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாமாயிலுக்கு பதிலாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில் ஆகியவற்றை பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு நல்லது.
பாமாயில் குறைவாக பயன்படுத்தினால் பிரச்சனை இருக்காது. ஆனால் அதிகமாக பயன்படுத்தினால் பிரச்சனை வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |