பாக்கியாவிற்கு I Love You கூறிய பழனிச்சாமி... வெடித்த கோபியின் இதயம்! அட்டகாசமான ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு பழனிச்சாமி ஐ லவ் யூ கூறியுள்ள நிலையில், இதனை அவதானித்த கோபி இதயம் வெடித்து பரிதாபமாக காணப்படுகின்றார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடந்த சண்டையால், பாக்கியா விடாமுயற்சி செய்து வீட்டை தன்வசப்படுத்தினார்.
இனியா தற்போது 12ம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு சென்றுள்ள நிலையில், இவருடன் பாக்கியாவும் கல்லூரிக்கு சென்று படிக்க உள்ளார்.
இதனிடையே தற்போது புதிய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பாக்கியா படிக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் இருவரும் பேசுவதற்கு டிரைனிங் கொடுத்துள்ளனர்.
அப்பொழுது பாக்கியாவிடம் பழனிச்சாமி ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் அருகே கோபியும் வயிறு எரிச்சலில் பார்த்துக்கொண்டிருக்கு, சட்டென்றி பழனிச்சாமி ஐ லவ் யூ கூறியுள்ளார். உடனே பெரும் கடுப்பில் கோபியின் இதயம் வெடிப்பது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.