ஜல்லிக்கட்டில் ஆட்டம் போட்ட 80 வயது மூதாட்டி... தீயாய் பரவும் காட்சி
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் 80 வயது மூதாட்டி ஒருவர் உற்சாசமாக நடனமாடி வீரர்களை உற்சாகப்படுத்திய காட்சி வைரலாகி வருகின்றது.
இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், கிராமங்களில் தமிழர்களின் கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் எனவும் நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதாலும், மூன்றாம் அலையின் பரவல் அதிகரித்து வருவதாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
மேலும், போட்டி நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பே கோரோனா நெகட்டிவ் சான்றிதழை போட்டியாளர்கள் அளித்த பின்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் 80 வயது மூதாட்டி ஒருவர் பார்வையாளராக கலந்து கொண்டு தனது நடனத்தினால் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
மூதாட்டியின் பெயர் சுந்தரம்மாள். இவருடைய சொந்த ஊர் ஆண்டிபட்டி என்றாலும், தற்போது இவர் சென்னையில் வசித்து வருவதுடன், அங்கு நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து தனது பிழைப்பை பார்த்து வருகின்றனர்.
இந்த வருமானத்தினை வைத்து வருடந்தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களுக்கு தவறாமல் வந்து செல்கின்றார்.
இதுகுறித்து சுந்தரம்மாள் பேசுகையில், தனக்கு இரண்டு மகன், இரண்டு மகள் உள்ள நிலையில், பேரன் பேத்தியும் இருக்கின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி என்பது தனது உயிருக்கும் மேல் என்றும் வருடந்தோறும் தவறாமல் கலந்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். பாட்டி சுந்தரம்மாளின் நடனம் பல சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.