Viral Video: திருமண உடையில் LED லைட்டுகளால் அலங்கரித்த மணப்பெண்
பொதுவாகவே திருமணம் என்றால் எல்லாம் நிறைவாக இருக்க வேண்டும். ஆடைகளில் இருந்து சமையல் வரை எல்லாமே எல்லோரையும் திருப்திபடுத்தும் அளவில் இருக்க வேண்டும்.
அதேபோல மணப்பெண்ணாக இருக்கும் நீங்கள் இன்னும் அழகாக தோன்ற வேண்டும். அதிலும் உங்கள் ஆடை என்பது அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
அப்படி ஒரு பெண் மற்றவர்களை கவர வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தான் பெண் செய்த வித்தியாசமான செயல் அனைவரையும் வியப்படைய வைத்திருக்கிறது.
ஆடையில் வித்தியாசம் காட்டிய பெண்
பாகிஸ்தானிய மணமகள் ரெஹாப் டேனியல், தனது கணவருடன் திருமண மண்டபத்திற்குள் நுழையும் போது அவரின் ஆடைகளில் வித்தியாசமாக LED லைட்டுகளை பொருத்திய ஆடையில் வித்தியாசம் காட்டி வருகிறார்.
திருமண விழாக்களில் அவர் அற்புதமாக பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகவும் அனைவரின் பார்வையும் தன்மீது விழ வேண்டும் என்பதற்காகவும் எல்.ஈ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட லெஹங்காவை வடிவமைத்திருக்கிறார்.
இவரின் இந்த புதிய முயற்சியை சிலர் விரும்பி இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |