“100 பெண்களைத் திருமணம் செய்வதே என் இலட்சியம்”: 27ஆவது திருமணத்திற்கு காத்திருக்கும் தாத்தா!
பாகிஸ்தானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 100 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்பதையே இலட்சியமாக கொண்டிருக்கிறார்.
100 திருமணங்கள் தான் கனவு
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர் தான். 60 வயதான சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி. இவர் ஒரு வைத்தியராவார்.
இவர் தற்போமு 26 முறை திருமணம் செய்துக் கொண்டு 22 மனைவிகளை விவாகரத்து செய்தவர்.
மேலும், இவர் தற்போது 4 மனைவிகளுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவரின் வழக்கம் என்னவென்றால் குழந்தைகள் பெறுவதற்காக திருமணம் செய்வதாகும். குழந்தைகள் பிறந்ததும் அவர்களை விவாகரத்து செய்து விடுவாராம். விவாகரத்திற்குப் பிறகும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இவர் தான் பொறுப்பேற்றுக் கொள்வாராம்.
இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, ‘இது எனது பொழுதுபோக்கு, இன்னும் 100 திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறியிருக்கிறேன், இது இஸ்லாமிய விதிகளின்படி கூட தவறில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், எனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியில், 100 திருமணங்கள் மற்றும் 100 விவாகரத்துகளை செய்துவிட வேண்டும் என்பது எனது ஆசை. இது தான் எனது லட்சியம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த செய்தியானது பாகிஸ்தானில் மட்டுமல்ல உலகதத்தில் இருக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.