PSL 2022: கேட்ச்சை விட்டதால் கன்னத்தில் சக வீரரை அடித்த பாகிஸ்தான் பவுலர் - சர்ச்சையாகும் வீடியோ
PSL 2022 பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய இந்த தொடர் 6 அணிகளும் 30 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் முழு பலத்துடன் மோதி வந்தன.
இத்தொடரின் நேற்றைய போட்டியில் பெஷாவர் மற்றும் லாகூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 158/7 ரன்களை எடுத்தது. இதனையடுத்து, 159 என்ற இலக்கை துரத்திய லாகூர் அணிக்கு அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 49 ரன்களும் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் சாகித் அப்ரிடி கடைசி நேரத்தில் 20 பந்துகளில் 39* ரன்கள் விளாசியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியும் மிகச்சரியாக 158/8 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
பின் நடைப்பெற்ற சூப்பர் ஓவரில் பெஷாவர் 8 ரன்கள் எடுக்க அதன் பின் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லாகூர் 5 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெஷாவர் சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றது.
போட்டியில் பெஷாவர் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 2-வது ஓவரை லாகூர் அணி பந்து வீச்சாளர் ஹரிஷ் ரவூப் (haris Rauf) வீச அதில் ஒரு பந்தை பெஷாவர் அணியின் பேட்டர் ஹசரத்துல்லா சாசாய் சிக்ஸர் அடிக்க முயன்றார்.
ஆனால், அது கேட்ச்சாக மாறி லெக் சைட் பகுதியில் நின்று கொண்டிருந்த கம்ரான் குலாம் கேட்ச் சென்றது. இரவு நேரபோட்டியால் பணியின் காரணத்தால் கேட்ச்சை நழுவ விட்டுவிட்டார்.
இதனால், விக்கெட் கிடைக்காத ஏமாற்றத்தில் கடும் கோபமடைய, அதே ஓவரின் 5-வது பந்தை வீசிய ஹரிஷ் ரவூப் பெஷாவர் பேட்டர் முகமத் ஹரிஷை 6 ரன்களுக்கு வெற்றிகரமாக அவுட் செய்தார்.
அதன் பின்னர் அந்த விக்கெட்டை சக வீரர்களுடன் கொண்டாட கேட்ச்சை கோட்டை விட்டதை மறந்து விட்டு அந்த கொண்டாட்டத்தில் பாராட்ட வந்த கம்ரான் குலாம்னை கன்னத்தில் திடீரென கேட்ச்சை நழுவ விட்டதற்காக ஹரிஷ் ரவூப் ஒரு அறை விட்டுள்ளார்.
ஆனால், கம்ரான் அதை பொறுப்படுத்தாமல் நெஞ்சில் தட்டிக்கொடுக்க பலரும் கம்ரானை பாராட்ட ரவூவ்வை திட்டி தீர்த்து வருகின்றனர்.
Wreck-it-Rauf gets Haris! #HBLPSL7 l #LevelHai l #LQvPZ pic.twitter.com/wwczV5GliZ
— PakistanSuperLeague (@thePSLt20) February 21, 2022
What is this behaviour of @HarisRauf14 . I request chairman of @TheRealPCB @iramizraja to take a serious note of this rude action of haris rauf. #HarisRauf #KamranGhulam https://t.co/o7SHQH7As7
— ROHEED SOFI (@youthclubbb) February 22, 2022