பாகிஸ்தான் தோல்விக்கு ஹசன் அலி தான் காரணமா? கடும் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஹசன் அலி மனைவி!
டி20 உலககோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. தனது முதல் டி20 கோப்பை என்பதால், பார்ட்டியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இதனையடுத்து, செமி பைனலில் பாகிஸ்தானிடம் போராடி வெற்றியை ருசித்திருந்தது ஆஸ்திரேலிய அணி. அந்த ஆட்டத்தின் போது, ஹசன் அலி செய்த டிராப் கேட்சால் தான் பாகிஸ்தான் அணி படுதோல்விக்கு காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன.
இதனால், இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் ஹசன் அலியை போட்டு திட்டி தீர்த்து வந்தனர். அவரை மட்டுமில்லாது குடும்பத்திற்கு ரசிகர்களிடம் இருந்து மிரட்டல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஹசன் அலியின் மனைவி ஷமியா அர்ஸு இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் அமீரகத்தில் வேலை பார்த்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர், இசுலாமியத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என்பதால், அவரது டுவிட்டர் கணக்கில் சென்று பாகிஸ்தான் ரசிகர்கள் அவரையும், குழந்தைகளையும் திட்டி வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்தும்படி ஷமியா அர்ஸு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்தபடி ஷமியா அர்ஸு பெயரில் டுவிட்டர் பதிவுகள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக ஹசன் அலியின் மனைவி ஷமியா அர்ஸு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கம் இன்ஸ்டாகிராமில் போஸ்டில், “பாகிஸ்தான் ரசிகர்களிடம் இருந்து எனக்கோ, எனது கணவருக்கோ, மகளுக்கோ அச்சுறுத்தல்கள் வரவில்லை.
மேலும், சமுக வலைதளங்கள் வழியாக அச்சுறுத்தல் வந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. நான் டுவிட்டரில் இல்லை. எனது பெயரில் வரும் டுவிட்டர் அக்கவுண்ட் போலியானது” என்று கூறியுள்ளார்.
