37 வயது காதலனுக்கு காத்திருந்த 70 வயது பெண்! கடைசியில் நடந்தது என்ன?
70 வயதான பெண் ஒருவர் 37 வயதான நபர் ஒருவரை திருமணம் செய்துள்ள சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
வயது வித்தியாசமின்றி ஏற்பட்ட காதல்
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் கிஷ்வர் பிபி(70). இவர் இப்திகர்(37) என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இப்திகருக்கும், தன்னுடைய இளம் வயதில் கிஷ்வர் மீது காதல் இருந்ததாக கூறப்படும் நிலையில், இவர்களின் காதலுக்கு வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் 33 வயது வித்தியாசம் இருந்ததால் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கிஷ்வர் வேறு யாரையும் திருமணம் செய்யாமல் இருந்துள்ளார்.
ஆனால் இப்திகருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததோடு, ஆறு குழந்தைகளும் உள்ளார்களாம்.


திருமணத்திற்கு பின்பு நீடித்த காதல்
திருமணத்திற்கு பின்பு கிஷ்வரை அடிக்கடி இப்திகர் சந்தித்து வந்துள்ளாராம். இந்நிலையில் குடும்ப சம்மதம் தெரிவித்ததோடு, கிஷ்வரை முதல் மனைவியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தற்போது பல ஆண்டுகள் கழித்து தனது காதலனை குறித்த பெண் கரம்பிடித்துள்ளார். இவர்கள் ஹனிமூனுக்கு தாங்கள் கராச்சி பகுதிக்கு செல்ல இருப்பதாகவும் இப்திகர் - கிஷ்வர் ஜோடி தெரிவித்துள்ளனர்.