இதற்காக தான் சரவணா அண்ணாச்சிக்கு ஜோடியாக ஒப்புக்கொண்டேன்.. உண்மையை உடைத்த பட ஹீரோயின்!
பிரபல சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் அந்த கடையின் உரிமையாளரான சரவணன் அருள். இவர், தனது கடை சம்பந்தமான விளம்பரப் படங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிக்கத் தொடங்கினார். ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட பிரபல நடிகைகளுடன் இவர் செய்யும் சேட்டைகளை ரசிகர்கள் மீம்ஸ் மற்றும் ட்ரோல் காட்சிகளாக வைரலாக்கி வருவது வழக்கம்.
இந்நிலையில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில், விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் சரவணன் அருள். இப்படத்திற்கான, போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் என இணையத்தில் உலா வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழி என பல மொழிகளில் இந்த படம் உருவாகி வருவகிறது.
இதனிடையே, சரவணன் அண்ணாச்சிக்கு பல முன்னணி ஹீரோயின்களை கதாநாயகியாக்க எவ்வளவு முயன்றும் முடியாத நிலையில், பிரபல நடிகையான ஊர்வசி ரவுத்தேலாவை, நீங்கள் ஏன் இந்த திரைப்படத்தில் நடிக்க சம்மதித்தீர்கள் என ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஊர்வசியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு, அவர், நான் தமிழில் அறிமுகமாகும் படத்தில் ஐஐடி மாணவியாக நடிக்கிறேன். அந்த ஒரு காரணத்திற்காகத் தான் இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி கதையை சொன்னதும் ஓகே சொல்லிவிட்டேன்.
ஐஐடி மாணவியாக நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என தன்னுடைய ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.