பல்லிகளை இவ்வாறு பார்த்தால் அபச குணமா? பலரும் அறியாத உண்மை
வீடுகளில் சுவரில் உலாவரும் பல்லிகள் ஆன்மீக ரீதியாகவும், வாஸ்து மற்றும் சகுணத்திற்கு முதன்மையாக பார்க்கப்படுகின்றது.
வீட்டில் நாம் பேசும் நல்ல காரியங்களிடையே பல்லி சத்தமிட்டால், அது நல்ல சகுணம் என்று இன்றும் மக்கள் கூறி வருகின்றனர். ஜோதிட ரீதியாக பல்லிகளைக் குறித்து பல விடயங்கள் உள்ளது. அவற்றினை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
பல்லிகளை அவதானிப்பது கெட்ட சகுணமா?
ஜோதிட முறைப்படி புதிதாக கட்டிய வீட்டில் பல்லி இறந்து கிடந்தாலோ, அல்லது சேற்று பல்லியை அவதானித்தாலோ, குறித்த கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுமாம்.
அதே போன்று வீட்டிற்குள் பல்லிகள் சண்டையிடுவதை பார்த்தால், அது கெட்ட சகுணமாம். அவ்வாறு அதனை அவதானித்தால், குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுமாம்.
பல்லி ஆண்களின் தலை அல்லது வலது கையிலோ, பெண்களின் இடது கையிலோ விழுந்தால் அதிஷ்டமாம்.
வலது கன்னத்தில் விழுந்தால் மகிழ்ச்சியான பலனைக் கொடுக்கின்றதாம். அதே போன்று கன்னத்தில் இடது பக்கத்தில் அல்லது பிறப்பிறுப்பில் விழுந்தால் ஆரோக்கிய பிரச்சினை ஏற்படும்.
வயிற்றில் விழுந்தால் உணவு தட்டப்பாடு ஏற்படும், அதே மார்பு மற்றும் காலில் விழுந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும்.
பல்லி உடலின் இடது பக்கத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் விழுந்தால், அது அசுப பலனை தருவதுடன், இதனை சரிசெய்ய எள், நெய், தங்கம் இவற்றினை தானமாக வழங்கினால் அசுப பலனிலிருந்து தப்பிக்கலாம்.