தோல்வியில் உலக சாதனையா? 253 தடவை வேட்புமனு தாக்கல் செய்த நபர்
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் என்பவர் முதல்நபராக வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ள நிலையில், இவர் இதுவரை 253 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
யார் இந்த தேர்தல் மன்னன்?
தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தான் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்பவர் தற்போது பேச்சுப்பொருளாக மாறியுள்ளார். இவர் இதுவரை 253 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளாராம்.

நேற்றைய தினம் தனது உதவியாளருடன் வந்த பத்மராஜன் முதல்நபராக 9 மணிக்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு போலிசார் அவரை உள்ளே விட மறுத்து 10 மணிக்கு வருமாறு கூறியுள்ளார்.
அங்கிருந்து சென்று மீண்டும் வந்தவர் தனது 253வது வேட்புமனுவினை காலை 11 மணிக்கு கொடுத்து உறுதிமொழி எடுத்துள்ளார்.

தோல்வியே உலக சாதனையா?
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பத்மராஜன் கூறுகையில், வெற்றி மட்டும் சாதனையல்ல... தோல்வியிலும் சாதனை படைக்கலாம் என்பதால் கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்து வருவதாக கூறியுள்ளார்.
1996ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் 5 நாடாளுமன்ற தொகுதியிலும், 3 சட்டமன்ற தொகுதியிலும் வேட்புமுனு தாக்கல் செய்துள்ளாராம்.
மறைந்த முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடும் தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் போட்யிட்ட தொகுதியிலும் தாக்கல் செய்துள்ளார்.
மேட்டூர் சட்டமன்ற தேர்தல் 2011ம் ஆண்டில் போட்டியிட்டு 6,273 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் அதிக தோல்வியை சந்தித்த வேட்பாளர் என லிம்கா புத்தகத்திலும் சாதனையில் இடம்பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளாதாக கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |