தீய பழக்கங்களுக்கு அடிமையாகி உயிரிழந்த நடிகர் பிரபு: இறுதிச் சடங்கு நடத்தி தகனம் செய்த டி இமான்!
படிக்காதவன் திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் பிரபு நேற்று உயிரிழந்திருக்கிறார். அவருக்கு டி. இமான் தான் இறுதிச்சடங்குளை செய்திருக்கிறார்.
நடிகர் பிரபு
மரணம் படிக்காதவன் திரைப்படத்தில் தனுஷின் தங்கையை பெண் பார்க்க வரும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் பிரவு.
இவரை பலருக்கு நினைவில் இருப்பதற்கு காரணம் இவரின் அந்தக் கதாப்பாத்திரம் தான். இவர் பல திரைப்படங்களில் நடித்தவர்.
மேலும் இன்னும் நிறைய படவாய்ப்புகள் வந்துக் கொண்டிருந்த வேளையில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து மது, புகையிலை என பல தீயப்பழக்கங்களுக்கு அடியாகி விட்டார்.
இந்த தீய பழக்கங்களின் விளைவாக அவருக்கு புற்று நோய் வந்திருக்கிறது. குடித்து குடித்து எல்லாவற்றையும் செலவழித்த பிரபு இறுதியில் மருத்துவ செலவிற்குக் கூட பணமில்லாமல் உடல் மெலிந்த நிலையில் ஆதரவில்லாமல் தவித்திருக்கிறார்.
இவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் அவரின் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டிருந்தார் ஆனால் அவருக்கு புற்று நோய் முற்றி விட சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்திருக்கிறார்.
இந்நிலையில், உயிரிழந்த பிரபுவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் அவரின் இறுதிச் சடங்குகளை செய்து உடலை தகனம் செய்யும் வரை இமான் செய்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |