படையப்பா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் செம ஹிட் அடித்த படம் படையப்பா.
இப்படத்தில் ரஜினியுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உட்பட பலர் நடித்திருப்பர்.
இன்றுவரை இப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது, ரஜினிகாந்தின் ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு, சௌந்தர்யாவின் சாந்தமான முகபாவனை என பல கோணங்களில் படத்தை பாராட்டலாம்.
குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, கே.எஸ் ரவிக்குமாரின் இயக்கம் என அனைத்துமே கச்சிதமாக பொருந்தியது.
இப்படத்தை முழுவதுமாக எடுத்துவிட்டு நான்கு மணிநேரமாக ரன்னிங் டைம் இருக்க, படத்தை எடிட் செய்து நீளத்தை குறைத்துவிடுங்கள் என ஐடியா கொடுத்தாராம் கமல்ஹாசன்.
இதேபோன்று சிவாஜி கணேசனுக்கு இப்படத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாம், அதுவரையிலும் அவர் லட்சங்களில் மட்டுமே சம்பளம் பெற்றிருக்கிறார்.
இப்படி பல சிறப்புகள் நிறைந்த படையப்பா படத்தில், சௌந்தர்யா கதாபாத்திரத்துக்கு நடிக்க வேறொரு நடிகையை தெரிவு செய்துள்ளார்கள்.
அதாவது நக்மாவை நடிக்க ஒப்பந்த செய்துள்ளார்கள் படக்குழு, இதற்கான படப்பிடிப்பும் நடந்த வேளையில் ஏதோ ஒரு காரணத்தினால் அவரால் தொடர முடியவில்லை.
இதன்பிறகே சௌந்தர்யா வந்திருக்கிறார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்று வெளியாகி வைரலாகி வருகிறது.