படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா? 25 ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை
படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் நீலாம்பரியாக நடிப்பதற்கு முன்பு எந்த நடிகை நடிக்கவிருந்தார் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
படையப்பா
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம், ‘படையப்பா’. இந்த படத்தில், சிவாஜி கணேசன், செந்தில், கிருஷ்ண மூர்த்தி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இரண்டு பேர் என்று தான் கூற வேண்டும். ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும் அவருக்கு நிகராக நடித்த ரம்யாகிருஷ்ணன் இவர்கள் தான்.
மேலும் இப்படத்தின் பஞ்ச் வசனமும் இதன் வெற்றிக்கு காரணமாகும். இன்று இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 100 நாட்களுக்கு மேல் ஓடிய ரஜினி படங்களில் இதுவும் ஒன்றாகும்.
நீலாம்பரியாக நடிக்க இருந்த நடிகைகள் யார்?
விமான விபத்தில் உயிரிழந்த நடிகை சௌந்தர்யா, இதில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்த்ரா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் சிம்ரனை அழைத்ததாகவும், அவர் படங்களில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது.
நீலாம்பரியான ரம்யா கிருஷ்ணனின் திமிரான பார்வையும், வசன உச்சரிப்பும், ஆக்ரோஷமான நடிப்பும் இன்றும் படையப்பா படத்தை பார்க்கும் போதெல்லாம் மயிர்கூச்சரிய செய்யும்.
இதற்கு முதலில் நக்மாவை அழைத்துள்ள நிலையில், வேறு ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதால் முடியாது என்று கூறியுள்ளாராம்.
அதன் பின்பு நடிகை மீனாவை கேட்ட நிலையில், ரஜினிக்கு எதிராக நெகட்டிவ் ரோலில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தவிர்த்துள்ளார். பின்பு நீலாம்பரியாக நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |