பொள்ளாச்சி பாணியில் பச்சை மிளகாய் சிக்கன் வறுவல்... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே சிக்கனை பல்வேறு வகைகளில் சமைக்க முடியும் என்பதன் காரணமாக அசைவ விரும்பிகளின் உணவுப்பட்டடியவில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது.
பச்சை மிளகாய் சிக்கன் வறுவல் தோசை, இட்லி, சப்பாத்தி , பூரி என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த வறுவலை பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சுவையில் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 8-10
பூண்டு - 8-10 பல்
இஞ்சி - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிப்பதற்கு தேவையானவை
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் துண்டுகள்- 2 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பான பதத்தில் நன்றாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே ஜாரில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து,அதையும் அதே போன்று அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள பூண்டு, இஞ்சி, மிளகாயை சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமாக வதக்கி,மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, கழுவி வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு தூவி நீர் விட்டு வரும் அளவுக்கு பாத்திரத்தை மூடி பத்து நிமிடங்களுக்கு நன்கு வேகவிட வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்ததும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி, நீர் வற்றும் வரை வேகவைத்து இறக்கினால், அசத்தல் சுவையில் பொள்ளாச்சி பச்சை மிளகாய் சிக்கன் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |