உடல் எடையை குறைக்கும் பச்சைப் பயறு சூப்- குளிர்காலத்தில் குடிக்கலாமா?
காலநிலை மாற்றங்கள் ஏற்படும் உணவில் மாற்றம் தேவை.
அப்படி செய்யாவிட்டால் காலநிலை மாற்றங்களால் வரும் விளைவுகளை கட்டுப்படுத்த முடியாது. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் உடல் சோர்வாக இருக்கும்.
அந்த சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில், உணவு பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் பிரச்சனைகள் போன்ற பல வைரஸ் தொற்று பாதிப்புகள் ஏற்படலாம்.
கோடை காலங்களில் ஏறிய எடையை ஆரோக்கியமான உணவு பழக்கம் இருந்தால் குளிர்காலத்தில் குறைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அந்த வகையில், எடையை குறைக்கும் பச்சைப் பயறு சூப்பை குளிர் காலங்களில் குடிப்பதற்கு ஏற்றால் போன்று எப்படி இலகுவாக செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை பயறு- 2 கப்
- வெங்காயம்- 1
- தக்காளி- 1
- உப்பு- தேவையான அளவு
- சீரகம்- 1/2 மேசைக்கரண்டி
- மிளகுத்தூள்- 1 மேசைக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப)
சூப் எப்படி செய்யலாம்?

முதலில் பச்சை பயற்றை எடுத்து, தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
கொஞ்சம் வெந்தவுடன் வெங்காயம், தக்காளி நறுக்கி சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு, சீரகம், மிளகுத்தூள் ஆகிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு சூப் தயார்!
குளிர்காலத்தில் குடிக்கலாமா?
1. இந்த சூப்பில் உடலுக்கு தேவையான இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன. இது உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது.
2. மற்ற தானியங்களிலும் பார்க்க பச்சை பயற்றில் பெரியளவில் கலோரிகள் இல்லை. சூடாக குடிக்கும் பொழுது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

3. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகளில் பச்சை பயறும் ஒன்று. இதனை உணவுடன் சாப்பிடும் பொழுது தேவையில்லாத கொழுப்புக்கள் உடலில் சேராமல் இருக்கும்.
4. பச்சைப் பயற்றில் உள்ள புரதம் தசைகளை வலுப்படுத்தி, குளிர்காலத்தில் வரும் சிக்கல்களில் இருந்து காப்பாற்றுகிறது. உடலின் வளர்ச்சியும் இதனால் மேம்படும். இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை கொடுக்கலாம். ஆனாலும் கொஞ்சம் அளவு அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |