காலை டிபனாக பச்சை பயறு தோசை செய்து சாப்பிட்டா தினமும் ஆரோக்கியமா இருக்கலாம்
ஒவ்வொருவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. அந்த உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் அப்படி காலையில் சாப்பிட ஏற்ற உணவுதான் பச்சை பயறு தோசை.
தேவையான பொருட்கள்
பச்சை பயறு – 3/4 கப் அளவு
இஞ்சி – சிறிய துண்டு
சீரக தூள்- 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 1
வெங்காயம் – 1 உப்பு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ராசியையும் பச்சைப் பயறையும் நன்றாக கழுவி 4 மணிநேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஊற வைத்த ராகி, பச்சை பயறு, இஞ்சி, கறுவேப்பில்லை, பச்சை மிளகாய் என்பவற்றை மிக்சியில் போட்டு மா பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
மா பத்திற்கு வந்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சீரகத்தூள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது தோசைக் கல்லி வழக்கமாக தோசை ஊற்றி எடுப்பது போல வேகவிட்டு எடுத்தால் பச்சை பயறு தோசை தயார்.