Bigg Boss: பாருவிற்கு நான் டாடா காட்டிட்டேன்... விஜய் சேதுபதியிடம் கம்ருதின் பதில்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாருவிற்கு டாடா காட்டியதை விஜய் சேதுபதியிடம் கம்ருதின் கூறியது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் 10 பேர் வரும் வாரத்தில் நாமினேஷனில் தெரிவாகியுள்ளனர்.
கம்ருதின் பார்வதி இடையே இருந்த காதல் தற்போது பிரேக் அப் ஆகியுள்ளது. இதனை மிகவும் கெத்தாக கம்ருதின் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார்.

கடந்த வாரம் பெற்றோர்கள் உள்ளே வந்து போட்டியாளர்களுக்கு சில அட்வைஸ் கொடுத்துவிட்டுச் சென்றனர். அந்த வகையில் பெற்றோரின் அட்வைஸைக் கேட்டு அதிரடியாக மாறிய நபரைக் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.
Actress Anikha: கிளாமர் உடையில் பார்த்த அனிகா புடவையில் வெளியான புகைப்படம்... வாயடைத்துப் போன ரசிகர்கள்
அப்பொழுது கம்ருதின், பாரு மொத்தமாக மாறியுள்ளதாகவும், அவங்க வழியைப் பார்த்து போறாங்க... நானும் அவங்களுக்கு டாடா காட்டிட்டேன் என்று கூறியுள்ளார்.
கம்ருதினின் பதிலைக் கேட்ட பார்வையாளர்கள் கைதட்டி தனது மகிழ்ச்சியினை வெளிகாட்டியுள்ளனர். பார்வதி தான் வேலை செய்யாததை நியாயப்படுத்தி பேசியது விஜய் சேதுபதியை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |