உலகில் ஒவ்வொரு மணிநேரமும் அதிக உயிரிழப்புகள் இடம்பெறும் நாடு எது?
உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியுள்ள நிலையில், இந்தியா 1.46 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக முதலிடம் பிடித்துள்ளது.
சீனா இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் சமீபத்திய Global Index Report-ன் படி, இந்தியா மற்றும் சீனாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கின்றனர்.
இந்த குறிப்பிட்ட நாடுகளில் உரு மணி நேரத்திற்கு எவ்வளவொ பேர் பிறக்கின்றனர். அதே கணக்கில் தற்போது இறப்புக்களும் நிகழ்கின்றன.
இதற்கு காரணம் அதிக மக்கள் தொகை, வாழ்வாதாரச் சவால்கள் மற்றும் சுகாதார வசதிகளில் உள்ள குறைபாடுகள் தான். பதிவில் நாடுகளின் பட்டியலை பார்க்கலாம்.

அதிக உயிரிழப்புகள் எந்த நாட்டில்
உலகில் ஒரு மணி நேரத்தில் அதிக மரணம் நிகழும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 1,221 பேர் இறக்கின்றனர்.
இது சீனாவில் உள்ள மிகப்பெரிய மக்கள் தொகை மற்றும் தொடர்ச்சியான சுகாதாரப் பிரச்சினைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.
இந்தியா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது, நம் நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 1,069 இறப்புகள் நிகழ்கின்றன.
இந்த அதிக மரணங்களுக்குக் காரணம், மக்கள் தொகை அழுத்தம் மட்டுமல்ல, சுகாதாரத் துறையில் இருக்கும் பின்னடைவு மற்றும் மக்கள் சந்திக்கும் பல்வேறு விதமான சவால்களுமாகும்.

இந்த பட்டியலில் உலக வல்லரசான அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 332 பேர் இறக்கின்றனர்.
இந்தியா மற்றும் சீனாவை விட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தபோதிலும், இது அமெரிக்காவை முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
நைஜீரியா ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 313 மரணங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்தோனேசியா ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 238 மரணங்களைப் பதிவு செய்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ரஷ்யா ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கிட்டத்தட்ட 198 பேர் இறப்புகளை பதிவு செய்து ஆறாவது இடத்தில் உள்ளது.

நமது அண்டை நாடான பாகிஸ்தான், மணிக்கு சுமார் 181 மரணங்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
ஜப்பான், மணிக்கு ஏறக்குறைய 180 மரணங்களுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
பிரேசில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது, அங்கு ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 167 பேர் இறக்கின்றனர். ஜெர்மனி, மணிக்கு சுமார் 108 இறப்புகளுடன் பத்தாவது இடத்தைப் பிடித்துதுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |