பெற்றோர் இல்லாத நேரத்தில் தவறாக நடந்த அண்ணன்? தங்கை கொடுத்த பகீர்! 2 வருடம் கழித்து அம்பலமாகிய உண்மை
காதலனுடன் ஊர் சுற்றுவதை கடுமையாக கண்டித்த அண்ணனை பழிவாங்க நினைத்திருக்கிறார் தங்கை. அண்ணன் இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து சுதந்திரமாக ஊர் சுற்ற முடியாது என்று முடிவெடுத்த அவர், அதற்கு என்ன செய்யலாம் யோசித்தபோதுதான் அந்த தடலாடியான முடிவை எடுத்திருக்கிறார். அதன்படி அம்மா, அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் கூடப்பிறந்த அண்ணன் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
இதையடுத்து போலீசார் அண்ணன் மீது தங்கையே புகார் கூறியதால் உண்மையாக இருக்குமென்று 24 வயது இளைஞரானஅவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்படி இரண்டு வருடமாக அவர் செய்யாத குற்றத்திற்காக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரே வெளியே எடுக்க பெற்றோர்கள் சட்டப்போராட்டம் நடத்தி வந்திருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் அவரது வழக்கறிஞர்கள், பாலியல் வன்கொடுமை செய்து விட்டார் என்று புகார் அளித்ததும் சிறையில் அடைக்கப்பட்டு விட்டார். ஆனால் பாலியல் குற்றச்சாட்டு உண்மைதானா என்பதற்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வில்லை என்று தெரிவித்தனர். தங்கைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் அண்ணன் சிறையிலிருந்த இரண்டு வருட காலங்களில் சுதந்தரமாக காதலனுடன் ஊர் சுற்றி வந்தாலும் செய்யாத குற்றத்திற்காக வீண் பழியை சுமந்து அண்ணன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்தி இருக்கிறார். அவர் தாமாகவே முன்வந்து உண்மையை ஒப்புக்கொண்டு அண்ணனை சிறையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த போதுதான், இந்த மருத்துவ பரிசோதனை பிரச்சனையை வந்திருக்கிறது .
அவராகவே நீதிமன்றத்தில் ஆஜராகி காதலனுடன் ஊர் சுற்றுவதை அண்ணன் கண்டித்து கடுமையான தடை போட்டார் என்பதால்தான் இப்படி ஒரு பொய்யைச் சொல்லி விட்டேன் என்று உண்மையை ஒப்புக் கொள்ளவும், அதற்காக இப்படியெல்லாமா நடந்துகொள்வது என்று அவரை கண்டித்த நீதிபதிகள், அவரின் அண்ணனை சிறையில் இருந்து விடுவித்துள்ளனர். இப்படி ஒரு விசித்திரமான சம்பவம் மும்பையில் தான் நடந்திருக்கிறது.