பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா? ரசிகர்கள் அதிர்ச்சி
பிக்பாஸின் வெற்றிகரமான 5 சீசன்களை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது.
சுமார் 13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர மற்ற பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Disney HotStar ஓடிடி தளத்தில், 24*7 மணிநேரமும் ஒளிபரப்பாகும், இதுவரையிலும் சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, அனிதா சம்பத் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து ஓவியா விலகி இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
உடல் நலம் சரி இல்லாத காரணத்தால், ஓவியா பங்கேற்க மாட்டார் என தகவல் கிடைத்துள்ளது.
எனவே இவருக்கு பதிலாக வேறொரு முக்கிய போட்டியாளரை களமிறக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.