கடுமையான உடற்பயிற்சி ஆபத்தை ஏற்படுத்துமா? உஷார் மக்களே
உடற்பயிற்சி என்பது உடல்நலனுக்கு மிகவும் முக்கியமானது என்றாலும் உடம்பை அதிகமாக வருத்தி உடற்பயிற்சி செய்வது ஆபத்தை ஏற்படுத்துமாம்.
கடுமையான உடற்பயிற்சி
சமீபத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது சில நபர்கள் மாரடைப்பு உட்பட பல காரணங்களால் உயிரிழந்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம்.
உடம்பை கட்டுக் கோப்பாக வைப்பதற்கு கடுமையான உடற்பயிற்சி மட்டுமின்றி ஊக்க மருந்துகள், ஊசிகள் இவற்றினையும் உடம்பில் செலுத்தி பல ஆபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.
ஆனால் உடற்பயிற்சினை மேற்கொண்டால் ஆபத்து என்ற எண்ணத்தினை உங்கள் மனதில் ஏற்படுத்திக் கொள்ளாமல், எதையும் அளவோடு செய்தால் எந்தவித ஆபத்தும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் உடற்பயிற்சி செய்வதற்கு தகுந்த பயிற்சியாளரை அருகில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.