வாட்ஸ்அப் Chat-ஐ யாரும் பார்க்கக்கூடாதா? இதை முயற்சி செய்து பாருங்க
வாட்ஸ் அப் செயலில் நாம் மற்றவர்களுடன் செய்யும் உரையாடலை ரகசியமாக வைத்துக் கொள்வதற்கு புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்
இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக Whatsapp இணையத்தை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது குறுஞ்செய்தியில் தொடங்கி பண வர்த்தனை வரை அனைத்தும் வாட்ஸ் அப்பினை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும்.
இதற்கு வாட்ஸ்அப் நிறுவனமும் தொடர்ந்து பல அப்டேட்டுகளை செய்து கொண்டே இருக்கின்றது.
இந்நிலையில் வாட்ஸ் அப்பில் நாம் மற்றவர்களுடன் செய்யும் உரையாடலை மறைத்துக் கொள்வதற்கு என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
எவ்வாறு மறைக்க முடியும்?
தனிப்பட்ட உரையாடலை பாதுகாப்பாக வைப்பதற்கு, பயனர்கள் தங்களது கைரேகை அல்லது பின் இவற்றினை வைத்து தங்களது அரட்டைகளைப் பூட்டி வைத்துக் கொள்ளலாம்.
இன்று பலரும் தனிப்பட்ட சாட்களை மற்றவர்களுக்கு காண்பிக்காமல் மறைத்து வைக்கவே விரும்புகின்றனர். இனி பிரைவேட் சாட்களை யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் எளிதாக மறைக்கலாம்.
நீங்கள் மறைக்க விரும்பும் அரட்டையைக் கண்டுபிடித்து அதை நீண்ட நேரம் அழுத்தவும். அரட்டையைத் தேர்ந்தெடுத்த பிறகு, திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று-புள்ளி மெனுவைத் தட்டவும். மெனுவிலிருந்து, லாக் அரட்டை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் கைரேகை மூலம் சரிபார்த்து அல்லது உங்கள் ஃபோனின் பின்னை உள்ளிடுவதன் மூலம், உங்கள் மொபைலின் பாதுகாப்பு அமைப்பைப் பொறுத்து தொடரவும்.
உறுதிப்படுத்தப்பட்டதும், அரட்டை தனி லாக் சாட் கோப்புறைக்கு நகரும். இந்தக் கோப்புறையை உங்கள் கைரேகை, பின் அல்லது விருப்பமான ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி மட்டுமே அணுக முடியும்.
உங்கள் மொபைலின் பின் அல்லது பேட்டர்ன் மற்றவர்களுக்குத் தெரிந்தால், பூட்டிய அரட்டைக்கு ரகசியக் குறியீட்டை அமைப்பதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |