Organic Mango: இலங்கை றீ(ச்)ஷாவில் இயற்கை உரங்களால் காய்த்துக் குலுங்கும் மாங்காய்!
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) organic முறையில் வளர்க்கப்பட்ட மாம்பழங்கள் தற்போது சந்தைக்கு கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் உள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு உட்பட பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பயிர்ச்செய்கைகள் உட்பட சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எவ்வித இரசாயண பதார்த்தங்களும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட organic மாம்பழங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |