ஆரஞ்சு பழத்துடன் இதை சேர்த்து சாப்பிடவே கூடாதாம்... காரணத்தையும் தெரிஞ்சிக்கோங்க
அதிக சத்துக்கள் கொண்ட பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்துடன், எந்தெந்த பொருட்களை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆரஞ்சு
வைட்டமின் சி சத்துக்களை அதிகமாக கொண்ட ஆரஞ்சு பழமானது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கு பிடித்தமானதாக இருக்கின்றது.
இவற்றில் பல ஊட்டச்சத்துக்கள், பன்முகத்தன்மை காணப்பட்டாலும், இதனுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு ஆரஞ்சு பழத்துடன் நாம் சேர்த்து சாப்பிடும் உணவுகள் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.
image: pharmeasy
ஆரஞ்சு பழத்துடன் சாப்பிடக்கூடாத உணவுகள்
பாலுடன் சேர்த்து ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்துவதுடன், செரிமான கோளாறு பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.
வைட்டமின் சி சத்து கொண்ட ஆரஞ்சு மற்றும் தக்காளி இரண்டையும் சேர்த்து சாப்பிடுதல் கூடாது. ஏனெனில் அமிலத்தன்மை தொடர்பான பிரச்சினையும், செரிமான பிரச்சினையையும் ஏற்படுத்துமாம்.
Photo Credit Helios4Eos/Getty Images
வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு இவற்றினை சேர்த்து சாப்பிட்டால், வயிறு தொடர்பான பிரச்சினையுடன், அசௌகரியத்தை ஏற்படுத்துமாம். ஆதலால் இரண்டு பழங்களையும் தனித்தனியாக சாப்பிடவும்.
இதே போன்று காரமான உணவுகளுடன் ஆரஞ்சு பழத்தினை சாப்பிட்டால் வயிற்று பிரச்சினையை ஏற்படுத்தும்.
காஃபி அல்லது தேநீருடனும் ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதை தவிர்க்கவும். வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு இவை சிக்கலை ஏற்படுத்துமாம்.
சீஸ் உடன் ஆரஞ்சு பழத்தினை சேர்த்து சாப்பிட்டால் அஜீரண கோளாறை ஏற்படுத்தும்.
ஆல்கஹால் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை சேர்த்து சாப்பிட்டால் வயிற்றின் உட்பகுதியை எரிச்சலடையச் செய்வதுடன், ஒவ்வாமை எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.
Catherine Falls Commercial/Getty Images
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |