ஓன்லைனில் புதிய Aadhaar PVC கார்டு பெறுவது எப்படி? இதோ வழிமுறைகள்
இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று ஆதார் அட்டை, பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவன சேவைகளுக்கு ஆதார் கட்டாயம்.
6 மாத குழந்தை முதல் ஆதார் பெற்றுக் கொள்ளலாம், குழந்தைக்கு 5 வயது ஆகும் போது ஆதாரை Update செய்து கொள்ள வேண்டும்.
இந்த பதிவில் Aadhaar PVC கார்டு பெற்றுக்கொள்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
PVC கார்டு வடிவில் ஆதாரில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பதிவு செய்து வழங்கப்படும், இதற்கு குறைந்தபட்ச கட்டணமே போதுமானது.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் இருந்தாலும் மற்ற மொபைல் எண்ணின் மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு.
இதற்கு முதலில்,
1. https://uidai.gov.in or https://myaadhaar.uidai.gov.in/genricPVC என்ற தளத்திற்கு செல்லவும்.
2. அதில் “Order Aadhaar Card” என்பதை தெரிவு செய்து உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடவும்.
3. Security code கொடுத்த பின்னர், “Request OTP” பட்டனை கிளிக் செய்யவும்.
4. மொபைலில் OTP பெறப்பட்டதும், அதை கொடுத்துவிட்டு “Terms and Conditions”-யை ஓகே செய்து கொள்ளவும்.
5. அடுத்ததாக “Submit” பட்டனை அழுத்திவிட்டு, “Make payment” என்பதை கிளிக் செய்யவும்.
6. அனைத்தும் முடிந்த பின்னர், உங்களுக்கான Service Request Number, SMS வழியாக அனுப்பப்படும், மேலும் ரசீதும் பெற்றுக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |