இந்த படத்தில் முதலில் தெரிந்தது மனித முகமா? அப்போ உங்க குணம் இதுதான்
ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.
அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.
அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.
மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.
நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
மூஞ்சுறு
உங்களது கண்களுக்கு முதலில் மூஞ்சுறு தெரிந்தால், நீங்கள் அவமானம் மற்றும் கேலியை நினைத்து பயப்படுவதுடன், எந்தவொரு விடயத்திலும் கவனமாக இருப்பீரக்ள்.
சுதந்திரமாக இருக்க நினைத்தாலும், மற்றவர்களை நினைத்து அஞ்சவும் செய்வீர்கள். பரிதாபமும், கேலியும் உங்களது நம்பிக்கையை குறைப்பதுடன், சுய முன்னேற்றத்திற்கு எப்பொழுதும் முன்னுரிமை அளிப்பதுடன், வேலையில் அதிக பொறுப்பாகவே இருப்பீர்கள்.
முக்கியமாக உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளை சரியான நேரத்தில் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள்.
முகம்
உங்களின் கண்களுக்கு முதலில் ஒரு முகம் தெரிந்தது என்றால், நீங்கள் தனிமைப்படுத்தப்படுவதை நினைத்து அதிகம் பயப்படுவீர்கள்.
மற்றவர்களுடன் பழகுவது வெறும் தேவைக்கு மட்டுமின்றி, உங்களது மன ஆரோக்கியத்திற்காகவும் தான் செய்வீரு்கள். தனிமை மட்டுமே உங்களின் உண்மையான பயமாக இருக்கும்.
தனிமையில் இருக்க விரும்பாத நீங்கள் உங்களைச் சுற்றி யாரேனும் இருக்க விரும்புவீர்கள். என்னதான் சுதந்திரமாக இருந்தாலும் யாராவது தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். இந்த குணம் உங்களுக்கு ஒருவித மன அமைதியை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |