மரத்தின் வேரில் பதுங்கியிருக்கும் பாம்பு! 10 நொடியில் கண்டுபிடிங்க
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உண்மையிலேயே கடினமானதுதான். இந்த காட்டில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கானா சவால். படத்தைப் பாருங்கள்!
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற இணைய புதிர்களாக இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக் கூடியவையாக இருக்கிறது. அவை முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பமாகவும் தெரியும். இறுதியில் விடை தெரியும்போது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும்.
இந்த ஆப்டிகள் இல்யூஷன் படங்கள், பொதுவாக, கண்டுபிடிங்க என்று உங்கள் கவனத்தை வேறு எங்கோ திருப்பி விட்டுவிட்டு விடையை வேறு எங்கோ மறைத்து வைத்திருக்கும். அந்த வகையில், இந்த படம் சற்று வித்தியாசமானது.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால், நீங்கள் இந்த படத்தில் காட்டில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க வேண்டும். அதிலும் 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். இதுவரை 1% பேர்கள் மட்டுமே பாம்பை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
10 நொடிகளுக்குள் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். மரத்தின் வேர்களுக்கு இடையே பாம்பு மறைந்திருக்கிறது. இப்போது படத்தை நன்றாகப் பாருங்கள்.
இன்னும் உங்களால் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இன்னொரு குறிப்பை தருகிறோம். மரத்தின் வலது பக்க வேர்களுக்கு இடையே பாம்பு சுருளாக சுற்றிக்கொண்டிருக்கிறது. இப்போது படத்தை பெரியதாக்கி நன்றாகப் பாருங்கள்.
இன்னும் உங்களால் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். விடையைக் கீழே தருகிறோம்.