கைப்பணி பொருட்கள் செய்பவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்! வேலை வாய்ப்பு கொடுக்கும் Reecha
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) சுற்றுலா பயனிகளை ஈர்க்கும் வகையில், பல்வேறு கைப்பணி பொருட்கள் விற்பனை செய்யும் காட்சிக்கூடமொன்று தாளம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு, முட்டை கோழி வளர்ப்பு உட்பட பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இல்லத்தரிகள் மற்றும் வேலையற்று இருக்கும் பெண்களுக்கு உதவும் முயற்சியாகவே இந்த கைப்பணிப்பொருட்கள் விற்பனையை றீ(ச்)ஷா ஆரம்பித்தது.
தற்போது கைப்பணி பொருட்கள் செய்யக்கூடியவர்களை வேலைக்கு அமர்த்தும் பணிகளும் றீ(ச்)ஷாவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான விபரங்களை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |