தவறியும் இஞ்சியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிட கூடாதது ஏன்னு தெரியுமா?
இஞ்சி மற்றும் மஞ்சளில் பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் இவற்றை சேர்த்து சாப்பிடுவதால் வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
இஞ்சி மஞ்சள்
இஞ்சி மறறும் மஞ்சள் இது இரண்டு பொருட்களும் மருத்துவ குணம் கொண்ட பொருட்களாகும். ஆனால் இதை அதிகமாக சாப்பிட கூடாது.
இந்த இரண்டு பொருட்களையும் வீட்டு வைத்தியத்தில் பயன்படுத்துவது அதிகம். அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த சர்குமின் மஞ்சளில் அதிகமாக உள்ளது.
கீல்வாதத்திற்கு நிவாரணம் தருவது முதல் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அறிகுறிகளுக்கு தீர்வாக உள்ளது. சளி, இருமல், குடல் அழற்சி நோய் போன்றவற்றை குணப்படுத்தவும் மஞ்சள் முக்கிய பங்கெடுக்கிறது.
இஞ்சியில் அதிக சத்துக்கள் இருக்கின்றன. இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இந்த மசாலா பொருட்களை அளவுக்கதிகமாக சாப்பிடும் போது வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
ரத்தம் உறைதல், டயாபடீஸ், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் இஞ்சி, மஞ்சள் கலந்த மருந்துகளை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |