முட்டை உடையாமல் வேக வைப்பது எப்படி... இதோ சூப்பர் ஐடியா! இல்லத்தரசிகளே உடனே படிங்க!
health
food
egg
egg boil
By Nivetha
முட்டையை வேக வைத்து சாப்பிட்டால் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும் என மருத்துவ நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்காகவே பலரும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவார்கள்.
முட்டையை வேக வைப்பது சுலபம் என்றாலும், அதை எப்படி சரியான பதத்தில் வேக வைப்பது என்று பலருக்கு தெரியாது.
உண்மையில் முட்டையை எப்படி வேக வைக்க வேண்டும் என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
10 நிமிடத்தில் எப்படி உணவு டெலிவரி முடியும்?

- முட்டையை வேக வைக்க எப்போதும் போல் முட்டை அதை எடுக்கக் கரண்டி, குளிர்ச்சியான தண்ணீர் ஆகியவை போதும்.
- முதலில் முட்டையை அகலமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றவும்.
- முட்டையைவிட ஒரு இஞ்ச் அளவுக்கு நீர் அதிகமாக இருக்க வேண்டும்.
- முட்டையை வேக வைக்கும்போது அடுப்பின் வெப்பம் குறைவாக இருக்க வேண்டும்.
- தண்ணீர் கொதிநிலையை அடைந்து கொதிக்க ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்துவிட்டு வெப்பம் வெளியேறாதவாறு தட்டு போட்டு மூடிவிடுங்கள்.
- அப்படியே மூன்று நிமிடங்கள் சுடு தண்ணீரில் இருந்தால் குறைந்த அளவு வெந்திருக்கும்.
- ஆறு நிமிடங்களாக இருந்தால் பாதியளவு வெந்திருக்கும்.
- 10 நிமிடங்களாக இருந்தால் முழுமையாக வெந்திருக்கும்.
- 12 நிமிடங்களைக் கடந்தால் கெட்டியான பதத்தில் வெந்துவிடும்.
- பிறகு அவற்றை குளிர்ச்சியான நீரில் மூழ்கும்படி போட்டு வெப்பம் குறைந்ததும் எடுத்து உரிக்கலாம்.
- உரிக்கும்போது இரண்டு முறை தட்டியும் உருட்டியும் உரித்தால் விரைவில் ஓடுகள் உரிந்துவிடும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US