முகம் சுழித்த தொகுப்பாளினி பிரியங்கா! இப்படி ஒரு விபரீத டாஸ்க்கா?
பாவக்காய் பஜ்ஜியை பார்த்து தொகுப்பாளினி பிரியங்கா முகம் சுழிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைந்து 'ஊம் சொல்றியா ஊஹும் சொல்றீயா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
மா.கா.பா ஆனந்த்தும் பிரியங்காவும் இதில் அடிக்கும் நகைச்சுவை கவுண்டர் டயலாக்குகள் பார்வையாளர்களை சிரிப்பில் ஆழ்த்திவிடும்.
வைரலாகும் ப்ரோமோ
அதேபோல நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் மிகவும் நகைச்சுவையாகவே இருக்கும்.
தற்போது நிகழ்ச்சிக்கான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் தொகுப்பாளினி பிரியங்கா பாவக்காய் பஜ்ஜியை பார்த்து முகம் சுழிக்கின்றார்.
தொகுப்பாளினியின் பரிதாப நிலை
பாவக்காய் என்ன தான் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதன் கசப்பு அனைவரையும் ஒட வைத்து விடும்.
தற்போது பஜ்ஜி சாப்பிடும் டாஸ்க்கில் தொகுப்பாளினியின் பரிதாப நிலை அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.