ஆன்லைனில் ஆர்டர் செய்த சமோசா... கண்ணிமைக்கும் நேரத்தில் 1.40 லட்சம் பறிபோன சோகம்
ஆன்லைனில் 25 பிளேட் சமோசாவை ஆர்டர் செய்த மருத்துவரின் 1.40 லட்சம் ரூபாய் பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமோசாவால் பறிபோன 1.40 லட்சம்
இன்றைய காலத்தில் தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றாலும், அதன் பாதிப்புகள் அவ்வப்போது அனைவரையும் அதிர்ச்சியடையவே வைக்கின்றது.
அதிலும் பணம் பரிமாற்றம் செய்யும் போது தொழில்நுட்பத்தின் உதவியால் பல லட்சங்களை ஒரே நேரத்தில் கொள்ளையர்கள் சம்பாதித்து விடுகின்றனர். இதுபோன்ற மோசடி குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.
மும்பையின் குடிமை நிர்வாகத்தால் நடத்தப்படும் KEM மருத்துவமனையில் பணிபுரியும் 27 வயது மருததுவர் ஒருவர் பிரபலமான உணவகம் ஒன்றில் 25 பிளேட் சமோசாவை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார்.
சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அவரின் நண்பர்களுக்கு பயணத்தின் போது சாப்பிட இதனை ஆர்டர் கொடுத்துள்ளார்.
ஆர்டர் எடுக்க தொலைபேசியில் பேசிய நபர், சமோசாவிற்கு 1500 ரூபாய் முன்பணமாக கேட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பணத்தை செலுத்துவதற்கு வங்கிகணக்கின் விபரமும் குறித்த மருத்துவரின் வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ளது.
இதன் மூலம் 1500 ரூபாயை பரிவர்த்தனை செய்துள்ளார். மறுபக்கம் பேசிய நபர் பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை ஐடி உருவாக்க கோரியுள்ளார். இதனை நம்பிய மருத்துவர் அவர் கூறியது போன்று தனது போனில் செய்து கொண்டிருந்த தருணத்தில் திடீரென 28.807 ரூபாய் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து மொத்த தொகையான 1.40 லட்சமும் பரிபோயுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் இதுபோன்ற மோசடி சம்பவங்களில் சிக்காமல் இனி வரும் காலங்களில் தப்பிப்பது பெரும் சவாலாகவே இருந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது சக நபர்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |