ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள்? உஷாரா இதை முதல்ல படிங்க
நீங்கள் அதிகம் ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்து சாப்பிடுபவரா? இனி அதை முற்றிலும் தவிர்க்கும் விதமாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
நீங்கள் அதிகம் ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்து சாப்பிடுபவரா? இனி அதை முற்றிலும் தவிர்க்கும் விதமாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டில் சமைப்பதற்கு சோம்பலாகியோ அல்லது வேறு சில காரணங்களாலும் ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்து சாப்பிடுபவர் எண்ணிக்கை தற்போது அதிகமாகி வருகிறது. இதனை பேச்சிலர் வாழ்க்கை வாழ்பவர்கள்அதிகம் விரும்புகின்றனர்.
அதில் இருக்கும் ரூசியை தெரிந்து கொண்ட அளவிற்கு, பின் விளைவுகள் பற்றி யாரும் அவ்வளவாக அறிந்து கொள்வதில்லை. ஸ்விக்கி, ஜூமெட்டோ, ஃபுட் பாண்டா போன்ற எண்ணற்ற மொபைல் ஆப் ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்வதற்கென்றே இருக்கின்றன.
ஆன்லைனில் ஆர்ட்ர் செய்பவர்கள் பெரும்பாலும் சைவம் அல்லது அசைவ உணவுகளில் அதிக மசாலா உள்ள பொருட்களை தான் ஆர்டர் செய்கிறார்கள். அது, உங்கள் பற்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்க கூடும் என்று ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
பாஸ்தா, பீட்சா போன்ற பொருட்களை தான் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. இவை இரண்டுமே பற் சிதைவை ஏற்படுத்த கூடியது. இதனால் பல் இனாமல் மற்றும் ஈறுகளில் அரிப்பு ஏற்படும் என்று கூறினால் நம்ப முடிகிறதா!
இவை இரண்டிலும் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் விரைவில் கரையக்கூடியவை. பற்களில் ஒரு படிமனாக படிந்து அரிப்பு உண்டாகும். இதனால் பல் கூச்சம் ஏற்படும். இந்த அரிப்பு ஏற்பட்டால் அதிகம் சூடான மற்றும் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட முடியாத நிலை வருவதிலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.
பற்களில் கரை ஏற்படுவது டீ அல்லது காபி குடிப்பதனால் மட்டுமல்ல. ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளில் அதிக மசாலா பொடி கலப்பதினாலும், பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. அதிகமாக அவ்வாறு ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்தால் மசாலா மற்றும் உணவில் கலக்கப்படும் நிறமிகள் பற்களில் படிந்து சுய நிறத்தை இழந்து மஞ்சள் நிறத்திலே மாறிவிடும்.
ஒரு செயலை செய்யும் போது அதனுடைய பின் விளைவுகளையும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம். ‘எளிதில் கிடைப்பது எல்லாம் எளிதிலே அனைத்து பிரச்னைகளையும் ஏற்படுத்த கூடும்’ என்பதை எப்போது கவனத்தில் கொள்ளவேண்டும்.