அளவுக்கு மீறி பெரிதாக இருந்த பேத்தியின் வயிறு... ஆன்லைன் வகுப்பினால் அரங்கேறிய அசிங்கம்
ராஜஸ்தான் மாநிலத்தில் 15 வயது அக்காவை 13 வயது சிறுவன் வன்புணர்வு செய்ததில் குறித்த சிறுமி கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுது்தியுள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளும் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுவன் தன்னுடைய 15 வயது சகோதரியுடன் ஆன்லைன் வகுப்பினை கவனித்து வந்துள்ளான்.
ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் ஆபாச காட்சிகளைப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த காட்சியினை அவதானித்து இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டுள்ளனர்.
தற்போது சிறுமி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரது பாட்டி பேத்தியின் வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்ததுடன், அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டு உடல் சோர்வினால் படுத்திருப்பதையும் பார்த்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, குறித்த சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் அவரது 13 வயது தம்பி என்பதும் உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் வீட்டில் ஆன்லைனில் படிக்கும் போது, பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.