வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு! வெங்காய தோலின் அற்புதம்
வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் இருப்பது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் நாம் குப்பையில் தூக்கி போடும் வெங்காய தோல்களில் உள்ள சத்துக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
வெங்காய தோலை எவ்வாறு பயன்படுத்தலாம்?
அதாவது இந்த சத்துக்களை பெறுவதற்கு வெங்காய தோலை சூப் வடிவிலோ அல்லது தேநீர் வடிவிலோ குடிக்கலாம்.
முதலில் வெங்காயத்தின் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் கழித்து, அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல்மிக்க நிறமியான க்யூயர்சிடின், தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுப்பதோடு உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.
அதன்படி புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலியக்கத்தின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
வெங்காய தோலானது உடல் பருமன், குடல் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கும்.