15 நிமிடத்தில் மதிய உணவு தயாரிக்கணுமா? இந்த ரெசிபியை செய்து கொடுங்க
பொதுவாக வீ்ட்டில் எல்லா சமயங்களிலும் காய்கறிகள் இருப்பதில்லை. சில நேரங்களில் வீட்டில் தக்காளி இல்லை, காய்கறி இல்லை என்றாலும் வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என நினைத்தால் வெங்காய புலாவ் தான் சிறந்த தெரிவு.
அட்டகாசமான சுவையில் வெறும் 15 நிமிடங்களில் வெங்காய புலாவ் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெய் - 1 தே.கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 10 பல்
வரமிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
மிளகுத் தூள் - 1/4 தே.கரண்டி
புளிச்சாறு - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
பாசுமதி அரிசி - 1 கப்
செய்முறை
முதலில் நெல்லிக்காய் அளவு புளியை 1/2 கப் தண்ணீரில் ஊற விட்டு கெட்டியாக சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு,10 நிமிடங்கள் வரையில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
அதனையடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூமதனதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை அதில் போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பூண்டு, வரமிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள, கரம் மசாலா, மிளகுத் தூள் ஆகியவற்றையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதங்கவிட வேண்டும்.
அதன் பின்னர் 1/2 கப் புளிச்சாறு மற்றும் 1 கப் தேங்காய் பாலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி, 2 விசில் வரும் வரையில் விட்டு இறக்கினால் அட்டகாசமான சுவையில் மணமணக்கும் வெங்காய புலாவ் தயார்.
இதனை வீ்ட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |