வெங்காயத்தோலில் இவ்வளவு நன்மையா? இனிமேல் தூக்கி எறியவே மாட்டீர்கள்!
பொதுவாகவே நாம் தூக்கி எறியும் பொருட்களில் தான் அத்தனை நல்ல குணங்களும் நிறைந்திருக்கிறது. அதுபோலதான் நாம் தினமும் வெங்காயத் தோலில் அவ்வளவு நன்மைகள் இருக்கிறதாம்.
வெங்காயத்தோலின் நன்மைகள்
வெங்காயத் தோல் பல ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். அவற்றில் விட்டமின் ஏ உள்ளது. இது பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் விட்டமின் சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. அவை தோல் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றன.
வெங்காயத்தோல் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டிருப்பதால் தோல் பிரச்சனைகளுக்கு பலன் அளிக்கின்றன.
வெங்காயத் தோலில் விட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இது கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது மற்றும் மாலைக்கண் போன்ற நோய்களைத் தடுக்கிறது.
இதற்கு வெங்காயத்தோல் தேநீர் தயாரித்து அருந்த வேண்டும். மேலும் இதனால் சருமத்தின் தன்மையும் மேம்படும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது வைரஸ் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.
சளி-இருமல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.
வெங்காயத் தோல் கூந்தல் ஆரொக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசினால் கூந்தல் உதிர்தல் பிரச்சனை நீங்கும்.
வெங்காயத் தோலைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குடித்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.
இவ்வாறான பலப்பிரச்சினைகளுக்கு வெங்காயத் தோல் மிகவும் பயன்படுகிறது.