டாக்டர் யோக வித்யா: வெங்காய சாறை இப்படி போட்டால் பொடுகு கொஞ்சம்கூட இருக்காது
பலரும் பொடுகால் பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதற்கு ஒரு தீர்வு தான் இந்த பதிவில் டாக்டர் யோக வித்யா அறிவுரையை பார்க்க போகின்றாம்.
பொடுகு தொல்லை
தற்போது இருக்கும் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை என்றால் அது பொடுகு பிரச்சனை தான். இதற்கு நமது வாழ்கை முறை தான் காரமே தவிர வேறு ஏதும் இல்லை.
இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற எக்கசெக்க மக்கள் காத்திருக்கின்றனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பொடுகு தொல்லை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் இப்போது முடி பட்டை பட்டையாக கொட்ட இந்த பொடுகு பிரச்சனை தான் முக்கிய காரணம். பொடுகு தொல்லையை போக்க நிறைய ஷாம்பூக்கள், சீரம் போன்றவை கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
ஆனால், இவற்றில் அதிக இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் இதன் மூலம் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில், வீட்டிலேயே இயற்கையான முறையில் பொடுகு தொல்லைக்கு தீர்வு காணலாம். இதற்கு மருத்துவர் யோக வித்யா அறிவுரைத்துள்ளார்.
இதற்காக சின்ன வெங்காயத்தை பயன்படுத்தலாம். அவர் கூறியபடி சின்ன வெங்காயத்தை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, அதன் விழுதை மட்டும் தலையில் தேய்க்க வேண்டும் என்கிறார்.
இதன் பின்னர், சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்தால் பொடுகு பிரச்சனை நீங்கும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
காரணம் சின்ன வெங்காயத்தில் இருக்கும் சல்ஃபர் பொடுகை நீக்கும் ஆற்றல் கொண்டது இதனால் பொடுகு பிரச்சனை முற்றாக நீங்க இயற்கையில் நல்ல வழி இது தான். என்று அவர் கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |