கூந்தல் முடியின் பிரச்சனைகளுக்கு வெங்காயச்சாறு தீர்வளிக்குமா?
பலரும் கூந்தல் பிரச்சனையால் பல முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் இந்த சிகிச்சை எல்லாம் அவ்வளவாக பயனளிக்காது.
நாம் நமது கூந்தல் முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிப்பதாகும்.
இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் இதை செய்ய தவறும் பட்ஜத்தில் முடி முற்று முழுதாக அதன் பொலிவை இழந்து பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறது. இதனை எளிய முறையில் வெங்காயசாறு வைத்து எப்படி தீர்க்க முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும்.
வெங்காய சாறு
வெங்காய சாறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. அதோடு முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது. இந்த சின்ன வெங்காயத்தை வைத்து சிகிச்சை செய்வது பழங்காலத்தில் இருந்து மக்கள் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு பண்பாகும்.
ஆனால் தற்போது நவீன காலத்தில் பலகெமிக்கல் பொருட்களின் பயன்பாட்டால் அது இல்லாமல் போய் விடுகிறது. இவ்ங்காயச்சாறை தலைக்கு பயன்படுத்தும் போது அது தலையில் உள்ள பொடுகுத்தொல்லையை இல்லாமல் செய்கிறது.
இதில் அதிகளாவான சல்பர் இருப்பதால் முடியை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது. அதாற்றுக்களை எதிர்த்து போராட வெங்காயச்சாறு ஒரு நல்ல தீர்வாகும்.
நமது உச்சந்தலை சேதத்தில் இருந்து வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பண்பு மிகவும் நல்லது. இந்த சாறை தலையில் பருத்திப் பாலை மூலம் தொட்டு பயன்படுத்த வேண்டும்.
குறைந்தது 30 நிமிடங்களுக்கு சாற்றை உச்சந்தலையில் அப்படியே விட வேண்டும். இப்படி வாரத்தில் இரு தடவை செய்து வந்தால் தலைமுடி பிரச்சனை உங்களை எட்டி கூட பார்க்காது. தலையில் உள்ள அனைத்துவிதமான பொடுகுத்தொல்லையும் இல்லாமல் போய் விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |