வெங்காயம் வெட்டும் போது கண்ணீரே வரக்கூடாதா? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்
வெங்காயம் வெட்டும் போது கண்களில் எரிச்சல் மற்றும் கண்ணீர் வராமல் இருப்பதற்கு சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வெங்காயம் வெட்ட வேண்டும் என்றால் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வந்துவிடும். ஆனால் வெங்காயம் இல்லாமல் உணவு சாப்பிடுவது என்பது மிகவும் கஷ்டமே.
கண் எரிச்சல் இல்லாமல் வெங்காயத்தை எவ்வாறு வெட்டுவது என்று சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
வெங்காயம் வெட்ட சிறந்த வழி
வெங்காயத்தை வாங்கும் முன்பு சரியான முறையில் தெரிவு செய்து வாங்கவும். அதாவது ஆரோக்கியம் சுவை நிறைந்ததாக இருக்குமாறு தெரிந்து கொண்டு வாங்கவும்.
கருப்பு அடுக்கு அல்லது வெள்ளை அடுக்கு கொண்ட வெங்காயத்திற்கு பதிலாக சிவப்பு வெங்காயத்தை தெரிவு செய்து வாங்கவும். இந்த வெங்காயமானது மற்றவற்றை விட ஆரோக்கியமானது ஆகும். கருப்பு அடுக்கு கொண்ட வெங்காயம் அழுகலின் அறிகுறியாகும்.
வெங்காயத்தை வெட்டும் போது முதலில் மேல் கீழ் முனைகளை வெட்டி எடுத்து, பின்பு வெங்காயத்தைஉரிக்கவும். கருப்பு புள்ளிகளை கொண்டிருந்தால் அவற்றை தனியாக வைக்கவும்.
வெங்காயத்தை வெட்டிய பின்பு கழுவும் பழக்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. அதாவது தோலுரித்த பின்பு கழுவி நறுக்கவும். இதனால் கண்ணீர் வரும் பிரச்சினை இருக்காது.
ஆதலால் வெங்காயத்தை உரித்து தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் போட்டு பின்பு உங்களுக்கு தேவையான அளவில் வெட்டிக்கொள்ளவும். இவ்வாறு செய்தால் கண்ணீர் வராமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |