வெங்காயத்திலிருந்து கருப்பு பூஞ்சை பரவுகின்றதா? நிபுணர்களின் பகீர் கருத்து
கொரோனா பாதித்தவர்கள் பலருக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று வந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனா தொற்று ஏற்படாதவர்களும் இந்த கருப்பு பூஞ்சை தொற்றுக்குள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த கருப்பு பூஞ்சை நோய் கண் மற்றும் நுரையீரலை அதிகம் பாதிக்கிறது என்றும் கொரோனா நோயாளிகளில் நீரிழிவு நோயாளிகளும், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் மட்டுமே இந்த நோய் அதிகம் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருப்பு பூஞ்சயினால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் நீரிழிவு நோயாளிகள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பு பூஞ்சை விவகாரத்தினால் மக்கள் பீதியில் இருந்து வரும் நிலையில், இது வெங்காயத்தின் மூலமாகவும் பரவுவதாக அதிர்ச்சி தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.
வெங்காயத்தின் மேல் கருப்பாக இருக்கும், சில வெங்காயத்தை உரித்த பிறகும் அந்த வெங்காயத்தின் சதை மேல் கருப்பாக இருக்கும். இதுவும் ஒருவகை கருப்பு பூஞ்சை தான்.
இந்த கருப்பு பூஞ்சை மூலமாகவும் நமது உடலில் கருப்பு பூஞ்சை வைரஸ் பரவிவிடும் என்று தகவல்கள் வைரலாகி வருகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இதை மறுத்துள்ளனர்.
வெங்காயத்தின் மேல் இருக்கும் கருப்பு பூஞ்சை, பூமிக்கு அடியில் காணப்படும் பூஞ்சை தான். இந்த பூஞ்சை அஸ்பெர்கிலஸ் நைகர் எனப்படும். மேலும் இதற்கும் தற்போதைய கருப்பு பூஞ்சைக்கும் தொடர்புபடுத்தி மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.