மீண்டும் வெடித்து சிதறிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்... பீதியடையும் வாடிக்கையாளர்கள்
ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியது முதல் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் ஒன்பிளஸ் நார்டு பயன்படுத்துவோரில் சிலர், தங்களின் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
அந்த வகையில், ஒன்பிளஸ் நார்டு 2 வார்ப் சார்ஜர் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது. ஸ்மார்ட்போனை சார்ஜருடன் இணைத்த சில நிமிடங்களிலேயே சார்ஜர் வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒன்பிளஸ் நிறுவனத்தை ட்விட்டரில் தொடர்பு கொண்டார். மேலும், ஸ்மார்ட்போனை சார்ஜர் உடன் இணைத்த சில நமிடங்களில் சார்ஜ் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒன்பிளஸ் நிறுவனத்தை ட்விட்டரில் தொடர்பு கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஒன்பிளஸ், மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சார்ஜர் வெடித்து சிதறியது என தெரிவித்து இருக்கிறது.
தற்போது வெடித்து சிதறிய சார்ஜருக்கு மாற்றாக ஒன்பிளஸ் சார்பில் வேறு சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.
I wanted to get this to your immediate attention. My OnePlus Nord 2 warp charger blasted with a huge sound and it blew up the socket. Luckily I'm alive to make this tweet. The Nord 2 is working. but this is scary af. I'm still in shock?@OnePlus_IN @oneplus @OnePlus_Support pic.twitter.com/K3fXCyGzNp
— Jimmy Jose (@TheGlitchhhh) September 25, 2021