மீனவர் வலையில் சிக்கிய ஒற்றை மீன்! 13 லட்சத்திற்கு விற்பனையான அதிசயம்
மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூரிலுள்ள திகா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 55 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான டெலிய போலா மீன் 13 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மீனவர் வலையில் சிக்கிய ஒற்றை மீன்
மீன்களில் பல வகைகள் உண்டு, பெரும்பாலும் மீன்கள் புரதச் சத்து மிகுந்த உணவு ஆகும், உணவுக்காக பிடிக்கப்படும் மீன்கள் ஒருபுறம் என்றால் மருந்து மற்றும் மருத்துவ ஆராய்ச்சி போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மீன்களும் தனி ரகம்.
இந்த வரிசையில் மேற்கு வங்கம் மிட்னாபூரில் தெற்கு நைனான் பகுதியைச் சேர்ந்த சிவாஜி கபீர் என்பவர் வலையில் 55 கிலோ எடையுள்ள டெலிய போலா என்ற அரிய வகை ராட்சத மீன் சிக்கியது.
இந்த மீன் திகா மீன் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது, மூன்று மணி நேரம் இந்த மீனுக்கு விலை ஏலம் கூறப்பட்டு வந்த நிலையில் பல உயர் ரக மருந்துகள் தயாரிப்புக்கு பயன்படும் இந்த மீன் இறுதியாக 13 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது. 55 கிலோ இந்த மீனில் 5 கிலோ கழிவுகள் கழிக்கப்பட்டு, மீதம் 50 கிலோவிற்கு, கிலோ 26 ஆயிரம் வீதம் கணக்கிடப்பட்டுள்ளது.
அப்படியென்ன ஸ்பெஷல்?
எஸ் எஃப் டி என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் இந்த மீனை வாங்கியது. இந்த மீனின் மொத்த எடை 55 கிலோ ஆகும். இது குறித்து தெரிவித்தார்
ஆண் பெண் மற்றும் இரு பாலின மீன் வகைகளும் இதில் உண்டு, இந்த டெலியா போலாஅதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இந்த மீனின் வயிற்றில் மிக உயர்ந்த தரமான சிறுநீர்பை உள்ளது. அதில் இருந்து மிக முக்கிய மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் இரு பாலின டெலியா போல வின் சிறுநீர்ப்பை மருந்து தயாரிப்பிற்கு அதிக பயனுள்ளதாக உள்ளது.
இந்த மீன் வட்டார வழக்கில் கச்சர் போலா என்று அழைக்கப்படுகிறது.