ருத்ராட்சை மாலை அணிந்துள்ளீர்களா? அப்போ இந்த விஷயத்தை செய்யாதீங்க
ருத்ராட்சை என்றால் அனைவரும் ஆன்மீக காரணத்தை மட்டும் தான் பார்க்கின்றனர். இந்த ருத்ராட்சத்தில் ஆன்மீகக் காரணி இருந்தாலும் அறிவியல் காரணிகள் நிறையவே இருக்கின்றன.
நமது முன்னோர்கள் அதை அணிய கூறியிருப்பதற்கான காரணம் இதுதான் அவர்கள் காரணம் எதுவும் இல்லாமல் நம்மை எதுவும் செய்விக்க மாட்டார்கள்.
இதில் இயற்கையாக ஆண்டிபயாடிக் தன்மை உள்ளது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். ஆன்மீகக்காரணிகள் நிறையவே உள்ளன. இதை எல்லா மதத்தவர்களும் அணியலாம்.
இதன் தூய்மை அப்படியே இருக்க வேண்டும் என்றால் இதை அணிவதுடன் என்னவெல்லாம் செய்ய கூடாது என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம்.
ருத்ராட்சை
ருத்ராட்சையில் இயற்கையாகவே நர்மறையான எண்ணங்களை ஈர்க்க கூடிய சக்தி உள்ளது. எனவே நமது உடலில் இந்த ருத்ராட்சை இருக்கும் போது மனம் ஒரு தெளிவையும் நிம்மதியையும் பெறும்.
இது மட்டுமல்லாமல் இது பல நோய்களை எதிர்க்க கூடிய சக்தியை கொண்டுள்ளது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற நோய்களை விரட்டக்கூடியது.
ஆன்மீக ரீதியாக இந்த ருத்ராட்சையில் நிறைய காரணங்கள் உள்ளன. இதனால் மனம் அமைதி பெறுவதுடன் முன்னேற்றம், செல்வம், மகிழ்வான வாழ்க்கை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்த ருத்ராட்சையை சிவப்பு, மஞ்சள், வெள்ளை நூல்களை தவிர கருப்பு நூலில் அணியக்கூடாது.
இந்த ருத்ராட்சை அணிந்திருக்கும் போது திதி, பெண்கள் தீட்டு, தாம்பத்யம் போன்ற விஷயங்கள் இயற்கையாகவே நடைபெறுவதால் இதை களற்ற வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் ஒருவர் இறந்த இடத்திற்கோ அல்லது தகனம் செய்யும்போதோ ருத்ராட்சத்தை அணியக்கூடாது. இத தவிர படுக்கையறையிலும் ருத்ராட்சம் அணியக்கூடாது.
இது மட்டுமல்லாமல் இந்த மாலை கழுத்தில் இருக்கும் போது இறைச்சி, ஆல்கஹால் சாப்பிட கூடாது. இதை மீறி நீங்கள் இதை செய்தால் இந்த ருத்ராட்சையில் இருக்கும் தூய்மை நீங்கி விடும்.
இதனால் எந்த பயனும் இல்லாமல் இது சாதாரண மாலை போல இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |