பீட்சா மட்டும் சாப்பிட்டு குறைத்த அதிசய நபர்! உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சூப்பரான செய்தி
இன்று பெரும்பாலான நபர்கள் பீட்சாவை முக்கிய உணவாக வைத்துக்கொள்ளும் நிலையில், இவை உடம்பிற்கு அதிகமான கெடுதல் தரக்கூடியவை என்பதை தெரிந்தே இவ்வாறு செயல்படுகின்றனர்.
பீட்சா சாப்பிட்டு குறைந்த எடை
பொதுவாக பீட்சா சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று அனைவருக்கும் தெரிந்த விடயமே. ஆனால் பீட்சா சாப்பிட்டு நபர் ஒருவர் மூன்றரை கிலோ எடையைக் குறைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல் பயிற்சியாளரான ரியான் மெர்சர், 30 நாள்கள் தினமும் 10 பீட்சாவை உட்கொண்டு, ஒரு வினோதமான சவாலை எடுத்துக்கொண்டு, தினமும் அதன் முடிவுகளை ஆன்லைனில் வெளியிட்டிருந்தார்.
34 வயதான இவர் காலை, மதியம், இரவு என அனைத்து நேரத்திலும் பீட்சாவைப் சாப்பிட்டுள்ளதுடன், ஒரு மாதத்தில் மூன்றரை கிலே உடல் எடையையும் குறைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தனது எடைக் குறைப்பு குறித்து பகிர்ந்து கொண்ட அவர், "இப்போது 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பீட்சா சாப்பிட்டாலும் உடல் கொழுப்பைக் குறைக்க முடியும் என்று அறிந்திருக்கிறார்கள்.
கொழுப்பு குறைக்க முயற்சிக்கும்போது, அதில் முன்னேற்றம் காண உங்களுக்கு பிடித்த உணவுகளை உண்ணாமல் கட்டுப்படுத்த வேண்டியதில்லை என்பதை நிரூபிக்க இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்" என பதிவிட்டிருந்தார்.