ஒரு மாதத்திற்கு அரிசி உணவை சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
ஒரு மாதத்திற்கு அரிசி உணவை கட்டுப்படுத்தினால் என்னென்ன மாற்றம் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அரிசி உணவு நல்லதா?
ஆசியாவில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் முக்கிய உணவாக இருப்பது அரிசி உணவு தான். ஏனெனில் இவை வயிறு நிறைவாக இருப்பதால் விரும்பி சாப்பிடுகின்றனர்.
அரிசி உணவு ஆரோக்கியம் தானா? என்ற கேள்வி இன்று பெரும்பாலான நபர்களுக்கு எழுகின்றது. பொதுவாக அரிசியில் உடம்பிற்கு தேவையான கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச், பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
மேலும் இவற்றினை அதிகமாக உட்கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதுடன், உடல் எடையும் அதிகரிக்கின்றது.
ஒரு மாதம் அரிசி உணவு சாப்பிடாமல் இருந்தால்?
ஒரு மாதத்திற்கு அரிசி உணவை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உங்களது உடலில் கலோரிகள் குறைவதுடன், உடல் எடையும் குறைகின்றது.
ஆனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும் அதே சமயம் மீண்டும் அரிசி உணவை சாப்பிட ஆரம்பித்துவிட்டால் சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், உடல் எடையும் அதிகரித்துவிடும்.
ஆனால் அதற்காக அரிசி உணவை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட வேண்டும் என்று கூறி விட முடியாது. சிறிய அளவிலான அரிசி உணவை உட்கொள்வது எந்த விதத்திலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
இதே போன்று அரிசி உணவை முற்றிலும் தவிர்ப்பது, வைட்டமின், தாதுக்கள் குறைபாடு ஏற்படுகின்றது. இது நபருக்கு நபர் வேறுபாடு இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசி உணவை முற்றிலும் தவிர்ப்பவர்கள், அதற்கு ஏற்ப ஊட்டச்சத்து மிகுந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் தான் பலவீனம் இல்லாமல் உடம்பிற்கு தேவையான சக்தியை பெற முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |