ஒரே ஒரு ரோஜா 130 கோடியா? அப்படியென்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கனுமா?...
உலகிலேயே மிக விலை உயர்ந்த ரோஜாவான ஜுலியட் ரோஜாவின் விலை பார்வையாளர்களை தலைசுற்ற வைத்துள்ளது.
ஜுலியட் ரோஜா
பொதுவாக ரோஜா பூ என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அனைவரையும் கவரும் அழகு அது ரோஜாவிற்கு மட்டுமே இருக்கின்றது.
இதுவரை நீங்கள் பல வண்ணங்கள் ரோஜா பூக்களை அவதானித்திருப்பீர்கள். ஆனால் கோடீஸ்வரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய ஜுலியட் ரோஜா குறித்து நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
ஆம் ஜுலியட் ரோஜா என்ற இந்த ரோஜாவை கோடிகளுக்கு நீங்கள் சொந்தக்காரராக இல்லையெனில், முகர்ந்து கூட பார்க்கமுடியாதாம். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ரோஜா வைரங்களை விட அதிகமாகும்.
இந்த ரோஜாவானது பூப்பதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். நீங்கள் எப்பேர்ப்பட்ட மோசமான மனநிலையில் காணப்பட்டாலும், உடனடியாக இந்த பூவின் மணம் உங்களை மாற்றிவிடுமாம். அதனால் தான் இதற்கு ஜுலியட் ரோஜா என்று பெயர் வந்துள்ளது. மிகவும் அரியாக பூக்கும் பூ என்பதால் தற்போது இதன் விலை 130 கோடி என்று கூறப்படுகின்றது.
ஜூலியட் ரோஜாவின் சிறப்பு
2006ம் ஆண்டு முதன்முதலாக வளர்க்கப்பட்ட இந்த ரோஜாவானது டேவிட் ஆஸ்டின் என்பவரிடம் இருக்கின்றது. பல சோதனைக்கு பின்பு இந்த விலையுயர்ந்த பூவை பூக்கச் செய்துள்ளார். பல ஆண்டுகள் இந்த செடி பராமரிக்கப்பட்டு தற்போது பூக்களை பெறுகின்றாராம்.
பிரபல நாளிதழ் அறிக்கையில், பல்வேறு வகையான ரோஜாக்களை கலந்து இதனை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இது மிகவும் மதிப்புமிக்கது என்று அப்பொழுது ரூ 90 கோடியாக இருந்த இதன் விலை தற்போது ரூ.130 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |